Wednesday, January 6, 2010

பள்ளி சீருடை துணி இலவசமாக வழங்கியது




மறைந்த திரு.சேதுரத்தினம் அவர்களின் ஞாபகர்த்தமாக அவருடைய துணைவியார் அவர்கள் மற்றும் அவரது மகன்கள் தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 1முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், தேனூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 220 பேருக்கும் 2 கால்சட்டை, 2 மேல்சட்டை, 2 பாவாடை, 2 மேல்சட்டைக்கான துணியை தந்தார்கள். மாணவர்களுக்கு துணியாக தராமல் தைத்து கொடுத்துவிடலாம் என்றும் , உள்ளூரில் உள்ள தையல்காரர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற எண்ணத்தில் 5மகளீர், 1ஆண் தையல்காரர்களுக்கு தைக்க கொடுத்தோம். மாணவர்களை மூன்று வித்தியாசமான உயரத்தில் நிற்க வைத்து, 3விதமான அளவு சட்டைகள் தைக்க முடிவு செய்து, தையல்காரர்களுக்கு நூல், பட்டன், கொக்கி, போன்றவைகள் அனைத்தும் கொடுத்தும் ஒரே இடத்தில் தைக்க வீடும் ஏற்பாடு செய்துக் கொடுத்தோம். அனைத்து துணிகளும் 45 நாட்களில் தைத்து முடிக்கப்பெற்றது. இச்சீருடைகளை பள்ளியில் கொடுப்பதற்கு தலைமையாசிரியர், அனைத்து பெற்றோர்கள், பெற்றோர் அசிரியர் சங்க தலைவர், பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர்கள், A.E.O மற்றும் இச்சீருடைகளை வழங்கிய திரு ராஜா மற்றும் திருமதி கமலம்மா, அறக்கட்டளையில் பணிபுரிபவர்கள், தையல்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாணவர்களாகிய நீங்கள் சுத்தமாக வர வேண்டும் என்பதை வழியுறுத்தியும், பள்ளி தூய்மை மற்றும் கிராம தூய்மை மேலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் போன்றவற்றை கூறி இது உங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி சீருடைகளை அனைவராளும் அனைத்து குழந்தைகளுக்கும் 2 சீருடைகள் வழங்கி மகிழ்ச்சியடைந்தார்கள். பெற்றோர்களிடம் தையல் கூலியாக 120 ரூபாய் தர வேண்டும் என்றும் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விளைவுகள்:

ஒவ்வொரு தையல்காரர்களுக்கும் சராசரி கூலியாக 5000ரூபாய் வரையில் கிடைத்தது. கொடுக்கும் போது அளவு மாறி சிலக் குழந்தைகளுக்கு வழங்கியதால் அவற்றை மாற்றி சரிசெய்து கொடுத்தோம்.

சில பெற்றோர்கள் தையல்கூலியும் இலவசமாக தரக்கூடாதா? என்று கூறினார்கள்.

சிலர் மகிழ்ச்சியாக ஒற்றுக்கொண்டனர். வேலையை நல்ல முறையில் நடைபெற உழைத்த செந்தில், கார்த்திக், பொன்னுதுரை, குமார், மனோகர், சரண்யா, ஹபீபு ரஹ்மான், டாக்டர் மைதிலி மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home