Saturday, June 6, 2009

Summer Camp

கோடைக்கால விடுமுறையை மாணவ மாணவிகள் பயனுள்ள விதத்தில் செலவழிப்பதற்காகவும், தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ளுவதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காகவும் விடுமுறையில் எந்த உறவினர்கள் வீட்டிற்கும் போகமுடியவில்லையே என்ற கவலையை போக்குவதற்கும், தேனூர் கிராமத்தில் உள்ள ஆறாம்,ஏழாம்,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 30 நாட்கள் summer camp ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு 48 மாணவர்கள் ஆர்வமுடன் தங்களுடைய பெயரினை பதிவு செய்தார்கள். இம்மாணவர்கள் சதீஷ் மற்றும் சுரேஷ் பாபு மூலமாக 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப அக்குழுக்களுக்கு தாமரை, பாயும் புலி,சீறும் சிறுத்தை, தங்கவேட்டை என்று பெயர் சூட்டப்பட்டது.

சுழற்சி முறையில் அனைத்து மாணவர்களுக்கும் எல்லாவிதமான பயிற்சியும் அளிக்கப்படவேண்டும் என்ற காரணத்திற்காக இக்குழுக்கள் பிரிக்கப்பட்டன.

எங்கள் மாணவர்கள் கற்றுக்கொண்டவைகளில் சில :
சதீஷ் அவர்கள் sudoku என்ற எண்புதிர் பயிற்சியை கற்பித்தார். செந்தில் கோபாலன் அவர்கள் நாடக நுணுக்கங்களையும் Dumb charades பயிற்சியும் கற்பித்தார்.

மாணவர்களுடைய சிந்தனைத் திறனை அதிகப்படுத்தவும், விரைவாக செயல்பட செய்யவும், நினைவாற்றலை அதிகப்படுத்தவும், உடல்அசைவுகள்மூலம் தங்களுடைய மனதில் உள்ள கருத்துகளை தெரியப்படுத்தவும். பச்சைமுத்து அவர்கள் puppet show riddles, math’s shortcuts போன்றவை கற்றுத்தரப்பட்டன.

மாணவர்களுடைய கலை ஆர்வத்தை வளர்ப்பதற்காக பயிர் அறக்கட்டளை ஆசிரியைகள் செல்லம்மாள் , சரண்யா, கவிதா,வினோதா, கலைச்செல்வி இவர்கள் மூலம் நம்முடைய பழம்பெரும் கலைகளான நாடகம், நடனம், பாட்டு, கும்மி,கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை கற்றுத்தந்தார்கள்

சிறுவர், சிறுமியர்கள் சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய விளையாட்டு ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்காகவும் chess, flying disc, Ring ball , Brain vita , coco and music chair போன்ற விளையாட்டுக்கள் கற்றுத்தரப்பட்டன.மேலும் ஏறக்குறைய 75 மாணவர்கள் மே 17,18 ந் தேதி சிலம்பாட்ட பயிற்சி திண்டிவணத்தை சார்ந்த ஜெயலட்சுமி மற்றும் மோகனவள்ளி அவர்கள் மூலம் கற்றுத்தரப்பட்டது.



இவர்கள் கற்றுக்கொண்டபயிற்சி மறக்காமல் இருப்பதற்காகவும் அவர்களுடைய ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்காகவும் தினமும் காலை ஒரு மணி நேரம் மைதிலி மற்றும் செந்தில் கோபாலன் அவர்களால் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு Computer மூலம் Painting ,HTML, photo shop, Morphing, Audition, GIMP போன்றவை சுந்தர், ரஜினிஸ்வரன் , சென்னை மனோகரன் அவர்கள் மூலம் கற்றுத்தரப்பட்டது.



இதுமட்டுமன்றி ரமாமதியழகன்,சீதா மற்றும் அருணா அவர்கள் மூலம் Embroidery, Glass painting and Emboss painting முதலியவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள்.






சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்திற்க்கு chess, flying disc, Ring ball , Brain vita , coco and music chair போன்ற விளையாட்டுக்கள் விளையாடினார்கள்.

கல்வி கற்கும் சிறுவர்களிடையே சேவை மனப்பான்மை வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் தேனூர் கிராமத்தில் உள்ள சியாளம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இப்பணியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த்து.

பயிற்சியின் போது நாங்கள் சந்தித்த சங்கடங்களில் சில:
பயிற்சியின் போது இடையில் சில மாணவர்களால் தொடர்ந்து வர இயலவில்லை. காரணம் என்னவென்று சக மாணவர்களிடம் வினவியபோது சுடுகாடு வரும் வழியில் இருப்பதால் அவர்களுக்கும் அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் அச்சமே காரணம் என்று அறிந்தோம். மேலும் சில மாணவர்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்லவேண்டி இருந்த்தால் தொடர்ந்து வர இயலவில்லை.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home