Monday, February 22, 2010

காலை உணவு வழங்கியதின் நோக்கம்










தேனூர் ஊராட்சியில் இணைந்த தொட்டியப்பட்டி என்ற ஒரு சிறிய ஊர். இவ்வூருக்கு பயிர் அறக்கட்டளையின் மூலம் இவ்வூரில் உள்ள குடும்பத்தின் ஆரோக்கியம், சுகாதாரம், அவர்களுடைய வேலை ஆகியவற்றை Health Workers மூலம் ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது சில குடும்பங்களில் உள்ள பெற்றோர்கள் காலை 6 மணிக்கு வெளியூர் போய் வயல் வேலை, விறகு வெட்டுதல், செங்கல் செய்தல் போன்ற வேலைகளுக்கு போய் விடுவார்கள். இவர்களுடைய சில குழந்தைகளை ஆடு மேய்க்க சொல்லிவிட்டு வேலைக்கு போய் விடுவார்கள். சில குழந்தைகள் குளிக்காமலும், வீட்டில் சாப்பிடாமலும் பள்ளிக்கு வந்துகொண்டிருந்தனர். பள்ளியில் வருகை மிக குறைவாக இருந்தது. இக்குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 43 மானவர்களுக்கும் 15.10.2008 இல் இருந்து பள்ளி நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு துணை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவியாகவும் குழந்தைகள் படிப்பதற்கு உதவவும்,குழந்தைகள் படிப்பதற்கு தேவையான சிலேட்டு, பென்சில், பேப்பர், எழுத்து பயிற்சி நோட்டு, போன்ற பொருட்களை வழங்கி உள்ளோம். குறிப்பாக அறக்கட்டளையிலிருந்து செல்லும் ஆசிரியர்கள் ஒன்றாம், மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு அடுத்த வகுப்புக்கு செல்லும்போது அடிப்படை எழுதுகளையும் எண்களையும்,தெரிந்திருக்க வேண்டும்.என்ற நோக்கத்தில் பாடம் கற்று தரப்படுகிறது .
விளைவுகள்
1. மாணவர்கள் சோர்வில்லாமல் பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
2. மாணவர்களின் வருகைப்பதிவு நன்றாக உள்ளது.
3. மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. இதேபோன்று டிசம்பர் 2009 லிருந்து கூடுதலாக தேனுர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.

இம்மாணவர்களுக்கு சென்னை ஆஷாவில் இருந்து உதவி வழங்கப்படுகிறது. சென்னை ஆஷாவிற்கு எங்களுடய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Labels: ,