Wednesday, January 6, 2010

முதியோர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கியது

சென்னையில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் 140 பேருக்கு வேஷ்டி, சேலை வழங்குவதாக திருமதி மேரி அம்மா கூறினார்கள். நாங்கள் தேனூர் கிராமத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கெடுத்து இவர்களில் ஆதரவற்றவர்கள், எந்த துணையும் இல்லாதவர்கள், ஏழ்மையானவர்களை பார்த்து அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேலை சாப்பாடு அளித்து, இலவசமாக B.P மற்றும் சர்க்கரைநோய், ஆய்வு செய்து நோய் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. டோக்கன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலை, துண்டு வழங்கப்பட்டன.

விளைவுகள்:

டோக்கன் கொடுக்காதவர்கள் மற்றும் வசதியுடையவர்கள் கூட வேஷ்டி,சேலை வேண்டும் என்று தகராறு செய்தார்கள். இவர்களை சமாளித்து உணவு அருந்திவிட்டு வாருங்கள் என்று கூறி சமாதானம்படுத்தி அனுப்பிவைத்தோம். இதற்கு ஒத்துழைத்த செந்தில், கார்த்திக், பொன்னுதுரை, குமார், மனோகர், சரண்யா, ஹபீபு ரஹ்மான், டாக்டர் மைதிலி மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

1 Comments:

Blogger போத்தி said...

//விளைவுகள்:

டோக்கன் கொடுக்காதவர்கள் மற்றும் வசதியுடையவர்கள் கூட வேஷ்டி,சேலை வேண்டும் என்று தகராறு செய்தார்கள்.//

ஒரு தொண்டு செய்தால், இப்படியும் நடக்குமா?

October 13, 2011 at 11:13 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home