Wednesday, January 6, 2010

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கல்வி திறனாய்வு எடுத்த விவரம்


அசர் நிறுவனத்தில் இருந்து எங்களிடம் ஒரு வாரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்க 24 பேர் வேண்டும் என்று சொன்னார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பயிற்சிக்கு வரவழைத்து (13.10.2009), (14.10.200அசர் நிறுவனத்தில் இருந்து எங்களிடம் ஒரு வாரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்க 24 9) இரண்டு நாட்களுக்கு திருமதி.சுமதி மற்றும் திரு.செந்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு அனைவரும் கலந்துக் கொண்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 22 கிராமத்தில் 600 குடும்பங்களும்,அரியலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் 600 குடும்பங்களும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களுக்கு தங்கும் இடம் மற்றும் சாப்பாடு ஆகியவை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுத்தோம். கல்வி திறனாய்வு புத்தகத்தை 2.11.09 க்குள் அனைவரும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் 25.10.09 இல் ஒவ்வொருவரையும் கேட்டால் இனிமேல் தான் எடுக்கப்போவதாகவும் 2தேதிக்குள் கொடுத்துவிடுவோம் என்று கூறினார்கள். அவர்களை தொலைபேசியின் மூலம் அடிக்கடி தொடர்புக் கொண்டு விசாரித்துக் கேட்டால் பேருந்து வசதி சில கிராமங்களுக்கு இல்லை என்றும் அதிக தொலைவில் இருப்பதாகவும் காரணம் கூறினார்கள். பிறகு அசர் நிறுவனத்தில் 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டோம். பிறகு 5ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களும் ஆய்வு செய்து சரிபார்த்து அனுப்பப்பட்டது.


முதியோர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கியது

சென்னையில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் 140 பேருக்கு வேஷ்டி, சேலை வழங்குவதாக திருமதி மேரி அம்மா கூறினார்கள். நாங்கள் தேனூர் கிராமத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கணக்கெடுத்து இவர்களில் ஆதரவற்றவர்கள், எந்த துணையும் இல்லாதவர்கள், ஏழ்மையானவர்களை பார்த்து அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. வந்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேலை சாப்பாடு அளித்து, இலவசமாக B.P மற்றும் சர்க்கரைநோய், ஆய்வு செய்து நோய் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. டோக்கன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலை, துண்டு வழங்கப்பட்டன.

விளைவுகள்:

டோக்கன் கொடுக்காதவர்கள் மற்றும் வசதியுடையவர்கள் கூட வேஷ்டி,சேலை வேண்டும் என்று தகராறு செய்தார்கள். இவர்களை சமாளித்து உணவு அருந்திவிட்டு வாருங்கள் என்று கூறி சமாதானம்படுத்தி அனுப்பிவைத்தோம். இதற்கு ஒத்துழைத்த செந்தில், கார்த்திக், பொன்னுதுரை, குமார், மனோகர், சரண்யா, ஹபீபு ரஹ்மான், டாக்டர் மைதிலி மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


பள்ளி சீருடை துணி இலவசமாக வழங்கியது




மறைந்த திரு.சேதுரத்தினம் அவர்களின் ஞாபகர்த்தமாக அவருடைய துணைவியார் அவர்கள் மற்றும் அவரது மகன்கள் தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 1முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், தேனூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 220 பேருக்கும் 2 கால்சட்டை, 2 மேல்சட்டை, 2 பாவாடை, 2 மேல்சட்டைக்கான துணியை தந்தார்கள். மாணவர்களுக்கு துணியாக தராமல் தைத்து கொடுத்துவிடலாம் என்றும் , உள்ளூரில் உள்ள தையல்காரர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற எண்ணத்தில் 5மகளீர், 1ஆண் தையல்காரர்களுக்கு தைக்க கொடுத்தோம். மாணவர்களை மூன்று வித்தியாசமான உயரத்தில் நிற்க வைத்து, 3விதமான அளவு சட்டைகள் தைக்க முடிவு செய்து, தையல்காரர்களுக்கு நூல், பட்டன், கொக்கி, போன்றவைகள் அனைத்தும் கொடுத்தும் ஒரே இடத்தில் தைக்க வீடும் ஏற்பாடு செய்துக் கொடுத்தோம். அனைத்து துணிகளும் 45 நாட்களில் தைத்து முடிக்கப்பெற்றது. இச்சீருடைகளை பள்ளியில் கொடுப்பதற்கு தலைமையாசிரியர், அனைத்து பெற்றோர்கள், பெற்றோர் அசிரியர் சங்க தலைவர், பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர்கள், A.E.O மற்றும் இச்சீருடைகளை வழங்கிய திரு ராஜா மற்றும் திருமதி கமலம்மா, அறக்கட்டளையில் பணிபுரிபவர்கள், தையல்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாணவர்களாகிய நீங்கள் சுத்தமாக வர வேண்டும் என்பதை வழியுறுத்தியும், பள்ளி தூய்மை மற்றும் கிராம தூய்மை மேலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் போன்றவற்றை கூறி இது உங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி சீருடைகளை அனைவராளும் அனைத்து குழந்தைகளுக்கும் 2 சீருடைகள் வழங்கி மகிழ்ச்சியடைந்தார்கள். பெற்றோர்களிடம் தையல் கூலியாக 120 ரூபாய் தர வேண்டும் என்றும் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விளைவுகள்:

ஒவ்வொரு தையல்காரர்களுக்கும் சராசரி கூலியாக 5000ரூபாய் வரையில் கிடைத்தது. கொடுக்கும் போது அளவு மாறி சிலக் குழந்தைகளுக்கு வழங்கியதால் அவற்றை மாற்றி சரிசெய்து கொடுத்தோம்.

சில பெற்றோர்கள் தையல்கூலியும் இலவசமாக தரக்கூடாதா? என்று கூறினார்கள்.

சிலர் மகிழ்ச்சியாக ஒற்றுக்கொண்டனர். வேலையை நல்ல முறையில் நடைபெற உழைத்த செந்தில், கார்த்திக், பொன்னுதுரை, குமார், மனோகர், சரண்யா, ஹபீபு ரஹ்மான், டாக்டர் மைதிலி மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.